ஸ்கொட்லாந்தில் அழிந்து வரும் 07 அரிய உயிரினங்கள் கண்டுப்பிடிப்பு!
ஸ்காட்லாந்திற்கான தேசிய அறக்கட்டளை (NTS), 07 அரிய உயிரினங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது அரசாங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்த கண்டுப்பிடிப்புகளில் ட்ரெஷ்னிஷ் தீவுகளில் (Treshnish Isles) அழிந்து வரும் கார்ன்கிரேக் (corncrake) குஞ்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உயிரினங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழ்நிலைகள் உள்ள பாதுகாப்பான இடங்களில் பராமரிக்கப்பட்டன.
இவை தவிர அரிய ரோவ் வண்டு, அந்துப்பூச்சி மற்றும் பல்வேறு பட்டாம்பூச்சி-ஆர்க்கிட்கள் (butterfly-orchids)ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள NTS இயற்கை பாதுகாப்புத் தலைவரான ஜெஃப் வாடெல் (Jeff Waddell), இந்த கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பிலிருந்து இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.





