தலைமன்னார் கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் மீட்பு!

தலைமன்னார் கடற்பகுதியில் மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு வந்தவர்கள் வவுனியா, மடு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டபோது அவர்கள் நீரிழப்பு மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
(Visited 14 times, 14 visits today)