தாய்லாந்தில் சொகுசு விடுதியில் மர்மமான முறையில் 06 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதி ஒன்றில் 06 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாங்காக்கின் ராட்சப்ராசோங் மாவட்டத்தில் உள்ள கிராண்ட் ஹயாட் எராவான் ஹோட்டலில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்குச் சென்ற பின்னர், அதிகாரிகள் மேலும் ஐவரைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 57 times, 1 visits today)