05 ஆண்டுகால போராட்டம் : ஒருவழியாக உரும்கி-யூலி (Urumqi-Yuli) விரைவுச் சாலையை திறந்த சீனா!
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள G0711 உரும்கி-யூலி (Urumqi-Yuli) விரைவுச் சாலை இன்று (26) திறக்கப்பட்டது.
இந்த விரைவுச் சாலை 324.7 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் இருவழி, நான்குவழி விரைவுச் சாலையின் தரத்தின்படி கட்டப்பட்டுள்ளது.
உரும்கி-யூலி (Urumqi-Yuli) விரைவுச் சாலையின் முக்கிய பாதையில் 12 மேம்பாடுகள், 17 சுரங்கப்பாதைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலங்கள் மற்றும் மதகுகள் உள்ளன.
அவற்றில், ‘தியான்ஷான்-ஷெங்லி’ (‘Tianshan-Shengli) சுரங்கப்பாதைத் திட்டம் உலகின் மிக நீளமான விரைவுச் சாலை சுரங்கப்பாதை மற்றும் உலகின் ஆழமான விரைவுச் சாலை சுரங்கப்பாதை என இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
விரைவுச் சாலை திறக்கப்பட்ட பிறகு, உரும்கியிலிருந்து ( Urumqi) கோர்லாவுக்குச் (Korla) செல்லும் நேரம் 7 மணி நேரத்திலிருந்து 3.5 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





