இந்தியா – பாகிஸ்தான் பதற்றத்தின்போது 05 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – ட்ரம்ப் கருத்து!

நாங்கள் (அமெரிக்கா) ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையிலேயே 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.
இரண்டும் தீவிர அணுசக்தி நாடு. இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். அது ஒரு புது வடிவிலான போர் போன்றது என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் ஈரானில் நாங்கள் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை முன்னும், பின்னுமாக சென்று கொண்டிருந்தது. மிகவும் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வர்த்தகம் மூலம் அதை தடுத்து நிறுத்தினோம். நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.
மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளாக நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறினோம் எனத் தெரிவித்துள்ளார்.