பிரித்தானியாவிற்கு புலம் பெயர முற்பட்ட 05 பேர் உயிரிழப்பு! நாடுகடத்தப்படும் அச்சத்தில் மக்கள்!

பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் முயற்சியில் Channelஐக் கடக்க முற்பட்ட 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு குழுக்கள் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை ரூவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
(Visited 15 times, 1 visits today)