ஆபத்தை உணராமல் மியன்மாருக்கு சென்ற மேலும் 05 இலங்கையர்கள்
மியன்மாரின் நிலைமையை பொருட்படுத்தாமல் மேலும் 05 இலங்கையர்கள் மியன்மாருக்கு சென்றுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்.
இதன்படி சரியான முறைகளின் ஊடாக வெளிநாடு செல்லுமாறு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
மியான்மரில் உள்ள முகாம்களில் இலங்கையர்கள் இன்னும் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.





