இஸ்ரேலின் தாக்குதலில் 05 ஊடகவியலாளர்கள் பலி : தொடரும் தாக்குதலில் பறிபோகும் உயிர்கள்!

இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே ஒரே இரவில் ஐந்து பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்கள் உள்ளூர் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் பணிபுரிந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
(Visited 35 times, 1 visits today)