காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 04 பத்திரிக்கையாளர்கள் பலி!
காசா நகரில் நிருபர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், பிரபல நிருபர் அனஸ் அல் ஷெரீப் உட்பட நான்கு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சக நிருபர் முகமது கிரீகே மற்றும் கேமராமேன் இப்ராஹிம் ஜாஹர் மற்றும் முகமது நௌபால் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில், ஷெரீப்பை குறிவைத்ததாகக் கூறியது.
நிருபர் ஹமாஸ் பிரிவிற்கு தலைமை தாங்கியதாகவும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் கூறியது.
(Visited 6 times, 1 visits today)





