இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் 03 பெண்கள் உயிரிழப்பு!
இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் மூன்று பெண்கள் உயிரிழப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமும் 15 தொற்றாளர்கள் கண்டறிப்படுவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும், மருத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





