பிரித்தானியா செல்ல முற்பட்ட 03 புலம்பெயர்ந்தோர் பலி : ஆபத்தான நிலையில் ஏழு பேர்!
பிரித்தானியா செல்ல முற்பட்ட மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் கலேஸ் கடற்பரப்பில் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தேவின் மேயர் தெரிவித்துள்ளார்.
சுமார் 50 புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு மனிதாபிமான தொண்டு நிறுவனமான Utopia 56 இன் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறு படகுகளில் கால்வாயை கடக்க முயன்ற 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)