ஐரோப்பா

கிறிஸ்துமஸ் தினத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட 03 விமானங்கள்!

கிறிஸ்துமஸ் தினமான இன்று 17 மணிநேரத்திற்குள் மூன்று அட்லாண்டிக் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத இரண்டு தரையிறக்கங்கள் இன்று காலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்டனில் (Boston) இருந்து அதிகாலை 1.50 மணிக்கு   புறப்பட்டு பாரிஸுக்குப் பயணித்துக் கொண்டிருந்த டெல்டா ஏர் லைன்ஸ் (Delta Air Lines) விமானம் DL-224  மருத்துவ அவசர நிலையை அறிவித்ததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து லண்டனுக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், மருத்துவ அவசரநிலையை அறிவித்ததை அடுத்து, ஷானன் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

போயிங் 777-223(ER) ஜெட் விமானமும் மருத்துவ அவசர நிலையை அறிவித்து அவசர தரையிறக்கத்தை சந்தித்தது.

மேற்படி மூன்று விமானங்களும் அயர்லாந்தில் முழுமையாக செயல்படும் ஷானன் (Shannon) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!