புத்தளம் பகுதியில் பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது
புத்தளத்தில்(Puttalam) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 542 கிலோ எடையுள்ள பீடி இலைகள் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 மற்றும் 24 வயதுடைய நபர்கள் புத்தளம் எத்தலை(Ethelai) மற்றும் பாலாவி(Palavi) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், வாகனம் மற்றும் பீடி இலைகள் ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறை சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




