02 அமைச்சகங்களின் செலவின தலைப்புகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் செலவினத் தலைப்புகள் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் 6வது நாளான இன்று, குறித்த சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)




