ஸ்ரீலங்கா என பெயரை மாற்றியமையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்
கடந்த சில தசாப்தங்களில் ஒரு நாடாக ஏற்பட்ட அனைத்து அழிவுகளுக்கும் முன்னர் அழைக்கப்பட்ட சிலோன் என்ற பெயரை ஸ்ரீலங்கா என மாற்றியமையே காரணம் என பிரபல வானியலாளர் அநுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது போல், ஸ்ரீ என்ற எதிர்மறை வார்த்தை அழிவின் அழைப்பாகும். இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கூட அந்த பெயரிடலால் அழிந்தார் என்று விளக்குகிறார்.
மேலும், நாட்டின் பெயருக்கு முன் ஸ்ரீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதும், தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பெயர்களை ஸ்ரீ என்று குறிப்பிடுவதும் நாடு திவாலாகும் நிலைக்கு இட்டுச் சென்றது என்றார்.
1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அதன் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்தாபித்த போது எமது நாட்டிற்கு ஒரு துரதிஷ்டமான நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
நாட்டின் வாகன இலக்கத் தகடுகளில் ‘ஸ்ரீ என்ற எழுத்து சேர்க்கப்பட்டு பின்னர் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி அந்த மோதல்களின் போது நாடு பெருமளவு உயிர் மற்றும் உடமைச் சேதங்களை சந்தித்ததை உதாரணங்களுடன் விளக்கினார்.
இலங்கை என பெயரிடுவதற்கு முன்னர் இலங்கை, சிங்களம், தம்பபன்னி, செரண்டிப், தப்ரோபேன், சிலோன், ஹெலதீவ, தம்ம தீவு, லக்பிம என்றழைத்தோம். அப்போது நாடு செழிப்பாக இருந்தது என்றார்.
இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.