வைட்டமின் Dயின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை
மருந்துக் கடைகளுக்குச் செல்லும்போது அடிக்கடி காணும் ஓர் உணவுத் துணைப்பொருள் வைட்டமின் D மாத்திரை என்ற போதிலும் பலருக்கும் அதன் நன்மை குறித்து தெளிவான அறிவு உள்ளனர்.
சூரிய ஒளியில் போதிய நேரம் செலவிடாதவர்களில் பலருக்கும் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அது இயற்கையாகவே தோலில் உற்பத்தியாகும் ஒரு வகையான உணவுச் சத்து; அதே நேரத்தில் அது ஒரு சுரப்பி (Hormone).
ஏன் சிலரது தோலில் வைட்டமின் D போதிய அளவில் உற்பத்தியாவதில்லை?
அதற்குப் போதிய அளவில் சூரிய ஒளி தேவை. அதிக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் இதனால் பாதிப்படையலாம்.
தோல் கருமை நிறத்தில் இருப்பவர்களிடம் அதிகமான melanin இருப்பதால், அவர்களது தோலில் சேரக்கூடிய சூரிய ஒளிக்கதிர்களை melanin பெரிய அளவில் மறைத்துவிடுகிறது. அதனால் அவர்களது உடலில் குறைவான வைட்டமின் D உற்பத்தியாகிறது.
வைட்டமின் D எதற்குத் தேவைப்படுகிறது?
Calcium, Phosporus ஆகியவற்றை உடலில் தக்கவைப்பது
(இவை இரண்டும் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானவை)
புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன
வைட்டமின் D உள்ள உணவுகள்?
சால்மன் மீன்
டியூனா மீன்
ஆரஞ்சுச் சாறு
சார்டின்
முட்டைக் கரு
சில காளான் வகைகள்
சில பால் வகை உணவுகள்
வைட்டமின் D சத்தை உட்கொள்வதற்கு எளிய வழி?
அதற்கான துணை உணவுப்பொருளை (supplement) எடுப்பதே மிக எளிமையான வழி என்கின்றனர் நிபுணர்கள்
வைட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடியவை:
எலும்பு
உடற்தசை
இதயம்
நோய் எதிர்ப்புச் சக்தி
சருமம்