செய்தி

வீட்டிற்கு சிலிண்டர்களை சுமந்துவராததால் மாணவருக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை!

இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தனது வீட்டிற்கு சுமந்து வராமையினால் ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கிய சம்பவம் மாத்தளை நாவுல பகுதியில் பதிவாகியுள்ளது.

பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன், ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் காவல் துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த மாணவர் தமது கட்டளையை நிறைவேற்றாமையினால் ஏற்பட்ட கோபத்தில் தாக்கியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளதோடு, மாணவர் மீது வேறு எவ்வித கோபமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றர்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி