“வடக்கை ஆள்வோம்: முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்” – சுமந்திரன்
“ஆளும் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி, JVP நாட்டை ஒருகட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் M. A. Sumanthiran தெரிவித்தார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலின்போது எமது கட்சியின் ITAK முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நான் விரும்புகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.
வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
சோசலிசத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் ஒரு கட்சி ஆட்சியை ஆதரிக்கவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள, வடக்கில் ஜேவிபியின் தேர்தல் வெற்றி, பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பைப் பிரதிபலிக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டால், தமிழ் அரசுக் கட்சி மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.




