வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!
வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ சீருடை அணிந்த ஏழு ஆயுதமேந்திய நபர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கடத்தல் நடவடிக்கைக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை குறித்த கடத்தல் சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பை அதிகரிக்குமாறு, சமூகங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாடு பல தசாப்தங்களாக வன்முறையால் சிதைக்கப்பட்டு வருகிறது, பெரும்பாலும் கிழக்கில் சுமார் 120 ஆயுதமேந்திய குழுக்கள் அதிகாரம், செல்வாக்கு, இயற்கை வளங்கள் மற்றும் சிலர் தங்கள் சமூகத்தை பாதுகாக்க போராடுகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)