இலங்கை

ரோஹிதவின் கணக்கில் இருந்த 400 டொலர்கள் மாயம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடன் அட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது.

இந்த நிலையில் பணத்தை திருட இணையத்தில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

ரோஹிதவின் கடன் அட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி இலக்கம் 184 இல் உள்ள வீடொன்றில் இருந்து மாத்தறை வீடொன்றிற்குச் சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக  முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இது  தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர்  நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்