ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ள போதிலும், ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!
இலங்கையில் தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ள போதிலும், தங்கத்தின் விலையில், எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது சர்வதேச நிதிநெருக்கடியில் அமெரிக்காவும் சிக்கியுள்ளதால், அந்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் சில வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன்காரணமாகவே தங்கத்தின் விலை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலைவரப்படி, இலங்கையில் 24 கரெட் பவுண் ஒன்று 1 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது. அதேபோல் 22 கரெட் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரெட் பவுண் ஒன்று 1 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாவாக உள்ளது. இந்த விலைகள் ஆபரணத் தங்கத்தை கொள்வனவு செய்யும்போது வேறுப்படும்.