ருசியும்,இசையும் சேர்ந்து மாபெரும் உணவு திருவிழா
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பல்வேறு மாநில,மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கல்லூரிகள்,தொழிற்பூங்காக்கள்,மருத்துவமனைகள் என பல்வேறு துறைகளில் பணி புரியும் மக்கள் வசிக்கும் பகுதியான கோவை வாழ் மக்கள், பொழுது போக்கு அம்சங்களாக வணிக வளாகங்கள் மற்றும் திரையரங் குகளையே அதிகம் நாட வேண்டி உள்ளது.இந்நிலையில் கோவை நகருக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் சூரியன் எஃப்.எம்.தன்னுடைய முதல் பதிப்பாக ருசியும்,இசையும் எனும் மாபெரும் உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.கோடை கால விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக கோவை வ.ஊ.சி.மைதானத்தில் துவங்கியுள்ள இந்த உணவு திருவிழா 29 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நூறுக்கும் மேற்பட்ட உணவு அரங்குகளுடன் துவங்கியுள்ள இதில்,குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு அம்சங்களுடன்,இசை ரசிகர்களுக்காக தினமும் இசைக்கச்சேரியும் நடைபெறுகிறது.. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சூரியன் எஃப்.எம்.இன் தலைமை நிர்வாகி அருண்மொழி மற்றும் மண்டல மேலாளர் பிரபு வெங்கடேஷ் ஆகியோர் கூறுகையில்,பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக உள்ள சூரியன் எப்.எம் இந்த ருசியும்,இசையும் உணவு திருவிழாவை.முதன் முறையாக நடத்துவதாகவும்,கோவையில் உள்ள உணவுகளின் சுவை மட்டுமின்றி,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள உணவு வகைகள், இனிப்பு வகைகள் என பல்வேறு வகையான பிரத்யேகமான உணவுகளை, கோவையில் சங்கமிக்க வைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் கோவை வாழ் மக்கள் குடும்பத்துடன் வந்து கொண்டாடும் வகையில்,விளையாட்டு அம்சங்கள் இசைக்கச்சேரி என புதிய அனுபவத்தை இந்த உணவு திருவிழா வழங்க உள்ளதாக குறிப்பிட்டனர்.