ஐரோப்பா செய்தி

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு செர்பிய அரசுக்கு அழுத்தம்!

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க செர்பியா அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அந்நாடு கண்டித்துள்ளது. இருப்பினும் மொஸ்கோவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொருளாதார தடைகளுக்கான மேற்கத்தேய நாடுகளின் அழைப்பை எதிர்த்துள்ளது.

இந்நிலையில், மொஸ்கோ மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என செர்பியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

செர்பியா அதன் முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்புகிறது. இருப்பினும் செர்பியா ரஷ்யாவின் எரிபொருளை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி