ரஷ்யாவில் ஏற்பட்ட பதற்றம் – முன்கூட்டியே அறிந்திருந்த அமெரிக்கா – வெளிவரும் அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவில் ஏற்பட்ட பதற்றம் – முன்கூட்டியே அறிந்திருந்த அமெரிக்கா – வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவில் வாக்னர் குழுவினரால் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்க உளவு அமைப்புகள் அதற்கான அறிகுறிகளை இம்மாத நடுப்பகுதியிலிருந்து அறிந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அதற்கான ஆதாரங்கள் இவ்வார நடுப்பகுதியில் உறுதிசெய்யப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டது.
உளவுத்துறை அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் அதன் தொடர்பில் சந்திப்புகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கலந்துபேசின. ஆனால் அவை அதில் தலையிடவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)