ரஷ்யாவின் பிறப்பு வீத வீழ்ச்சியை சமாளிக்க புட்டின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க “பாலியல் அமைச்சகத்தை” நிறுவுவது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மகப்பேறு மற்றும் குழந்தைப் பருவத்திற்கான ரஷ்ய நாடாளுமன்றக் குழுவின் தலைவியாக 68 வயதான நினா ஒஸ்தானினாவை நியமித்துள்ளார்.
இவர் அமைச்சகத்திற்காக வாதிடும் மனுவை மதிப்பாய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் ஒன்று பிறப்பு வீதம் விழ்ச்சியடைந்து வருவது. இதனை மாற்றியமைக்க புட்டின் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இதன் ஒருபகுதியாகவே நாடாளுமன்றத்தில் இவ்வாறான ஒரு அமைச்சகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)