ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஜெர்மன் அதிபரைச் சந்தித்த ஜோ பைடன்
ஜேர்மன் அதிபரைச் சந்தித்த ஜோ பைடன் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்த ரஷ்யாவின் அறிக்கையைப் பகிரங்கமாக அமெரிக்க அதிபர் புறக்கணித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவிற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையில் ஜேர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் மற்றும் ஜோ பைடன் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 400 கோடிக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதற்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவது மிகப்பெரிய போருக்கு வழி வகுக்கும் எனக் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் எனக் கூறிய ஜோ பைடன், மேலும் உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் பற்றின ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு வாஷிங்டனுக்கு தனது முதல் பயணமாக வந்த ஜேர்மன் அதிபர் ஸ்கோல்ஸை ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவர்கள் கடைசியாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, ரஷ்யா தனது படைகளை எல்லையில் குவித்தது, என ஜோ பைடன் கூறியுள்ளார்.அப்போது பேசிய ஸ்கோல்ஸ் உக்ரைனுக்கு ஒரு செய்தியை அனுப்புவது முக்கியம் என்றவர் , நாங்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்போம், இது ஒரு முடிவுக்கு வரும் வரை. எனக்கூறியுள்ளார்.
ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு போரினால் வரப்போகும் சிக்கல்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது, ஆனால் இரு தலைவர்களும் அந்த கேள்விகளை புறக்கணித்தனர். மேலும் இருதரப்பு உறவு மிகவும் நல்ல நிலையில் உள்ளது என்று ஜேர்மன் அதிபர் ஷோல்ஸ் கூறியுள்ளார்.