யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளம் யுவதி

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை காவல் துறை பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக வந்திருந்த இளம் பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பெண் கடத்தப்பட்ட வேளையில், நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)