ஐரோப்பா செய்தி

மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்

நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது வேலைநிறுத்தம் இதுவாகும்.

இந்த வேலைநிறுத்தம் குறிப்பாக மருத்துவமனைகளில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய காலம் எப்போதும் சவாலானது என்பதால், மருத்துவ சங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு “அழற்சிமான செயல்” (inflammatory act) என்று தேசிய சுகாதார சேவை (NHS) அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அரசாங்கத்திடம் இருந்து தகுந்த சம்பள உயர்வு (credible offer) கிடைக்காததால், வேறு வழியின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!