மிகமோசமான அளவு அதிகரித்துள்ள இந்திய வேலைவாய்ப்பின்மை சதவீதம்
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான CMIE வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய கடந்த மார்ச் மாத வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய நகரங்களை பொறுத்தவரை 8.4 சதவீதமாகவும், கிராமங்களில் 7.5 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தரவுகளின் படி, வேலையுள்ளவர்கள் எண்ணிக்கை பெப்ரவரியில் 409.9 மில்லியனிலிருந்து (36.9%) மார்ச்சில் 407.6 மில்லியனாக (36.7%) குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் 39.9% லிருந்து 39.8% ஆக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





