செய்தி

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 ஆவது வயதில் நேற்று (29) இரவு உயிரிழந்துள்ளார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி