இலங்கை செய்தி

மருந்து தட்டுப்பாடு இம்மாதத்தில் முடிவுக்கு வரும் – கெஹெலிய!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பெரும்பாலும்  இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் சத்திர சிகிச்சை உட்பட முன்னுரிமையளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஷேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளின் போதும் வருடத்தின் முதல் காலாண்டுக்குள் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பில் நான் தெரிவித்திருந்தேன்.

நாட்டில் 156 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவியது. அதில் 83 மருந்துகள் நேற்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடனான இத்தகைய சூழ்நிலையிலும் சுகாதாரத்துறைக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் கடன் திட்டத்தின் ஊடாக மருந்துகளை பெற்றுக் கொண்டாலும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்திய நாணயத்தில் அவ்வாறு கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அவற்றில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்வருகிறது.

அதன்படி மருந்துப் பொருட்கள் தொடர்பான இந்த பிரச்சினையை முதற்காலாண்டிற்குள் தீர்த்து வைப்பேன் என தெரிவித்திருந்தேன். அந்த வகையில் இந்த இரண்டு மூன்று வாரங்களில் பெருமளவு மருந்துகள் எமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன எனக் கூறினார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை