மருந்து ஏற்றுமதியைப் பாதுகாக்க இந்தியா தூதரக முயற்சியில் ஈடுபட்டுள்ளது
காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் தொடர்புபட்டதை அடுத்து, இந்திய அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, ஆப்பிரிக்காவில் அதன் மருந்து ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சந்திப்புகளை நடத்தியுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மருந்துத் தொழில் உலகின் மிகப்பெரிய ஒன்றாகும், ஆனால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்ட சோதனைகள் இருமல் மருந்துகளில் நச்சுகள் இருப்பதைக் காட்டிய பின்னர் அதன் நற்பெயரை பாதித்துள்ளது.
கடந்த ஆண்டு காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகளும் இறந்ததில் இந்தியாவிற்கு பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
மருந்து ஏற்றுமதியில் இந்த சம்பவங்களின் தாக்கத்தை அரசாங்கம் மதிப்பீடு செய்திருக்கிறதா என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டதற்கு, பல்வேறு முகவர்கள் இந்த விஷயத்தில் செயல்பட்டு வருவதாக துணை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மருந்து ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குள் நம்பிக்கையைத் தக்கவைக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது என்று அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.