இந்தியா செய்தி

மது போதையில் மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: மணமகள் எடுத்த அதிரடி முடிவு!(வீடியோ)

அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது தொடர்பாக மணமகளின் உறவினர் தெரிவித்துள்ள தகவலில், திருமணம் சிறப்பாக நடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், ஆனால் மணமகனின் வீட்டார்கள் 95 சதவிகிதத்தினர் குடித்து இருந்தனர்.

நிலைமை தொடர்ந்து அதிகரித்ததால், மணமகள் மண மேடையில் உட்கார மறுத்துவிட்டாள், இதையடுத்து காவ்ன் புர்ஹாவை(அசாமிய கிராமத்தின் தலைவர்) தொடர்பு கொண்டு காவல்துறைக்கு அறிவித்தோம் என தெரிவித்துள்ளார்.அத்துடன் மாப்பிள்ளையால் காரில் இருந்தே இறங்க முடியவில்லை, இதில் அவரது தந்தையும் நல்ல குடி போதையில் இருந்தார் என மணமகளின் உறவினர் தெரிவித்துள்ளார்.மேலும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி நல்பாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!