நாட்டை விட்டு வெளியேறிய வெனிசுலா ஜனாதிபதி – தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) கைது செய்யப்பட்டு, அவரது மனைவி சில்லா புளோரஸுடன் (Cilla Flores) நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று அதிகாலையில் வெனிசுலா மீது அமெரிக்கா “பெரிய அளவிலான தாக்குதலை” நடத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் தலைவர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது, அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.






