இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிக்க தீர்மானம்

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்க ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியது.

இந்த நியமனம் 2023 மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஏப்ரல் 01ஆம் திகதி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர்  தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான  சாகர காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை