பொது மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கோரிய தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர்

தவறுதலாக சொந்த நாட்டு மக்கள் மீது தென்கொரியா குண்டு மழை பொழிந்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்கா உடனான கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தவறுதலாக தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுமழை பொழிந்ததற்கு தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர் தலைவணங்கி மன்னிப்பு கோரினார்.
வடகொரியா எல்லைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள போச்சியோன் என்ற இடத்தில் இருநாட்டு படைகளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎப்-16 ரக போர் விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வீடுகள், சர்ச்சுகள் மீது விழுந்து சுமார் 29 பேர் காயமடைந்தனர்.
(Visited 1 times, 1 visits today)