இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணத்துடன் கல்வி அமைச்சின் 2026 புத்தாண்டு ஆரம்பம்

2026ஆம் ஆண்டின் புத்தாண்டை கல்வி அமைச்சு, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையுடன் ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சின் ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில், கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (01) விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

இதன்போது, பேரிடரால் உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்பு பணிகளில் உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, சில ஊழியர்கள் இரண்டு நாட்கள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

மேலும், பலர் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்க நிவாரண நிதிக்கு வழங்கினர்.

நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, துணை அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா ஆகியோர் உரையாற்றி, ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அமைச்சின் எதிர்கால இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பணியாளர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!