பேராதனை புகையிரதப் பாலத்தின் சேத மதிப்பீடு பணிகள் ஆரம்பம்
பேராதனையில் அமைந்துள்ள புகையிரதப் பாலத்தைத்தின் சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழகம், புகையிரத திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், கட்டிட ஆய்வுமையம் உற்பட பல நிறுவனங்க் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த பாலம் 1897ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்துடன் இதன் நீளம் 348 அடிகளாகும்,
மேற்படி பாலத்தை திருத்தி அமைத்தல் அல்லது முற்றாக மாற்றி அமைத்தல் பற்றிய மதிப்பீடு மற்றும் பாலத்தில் தங்கியுள்ள கழிவுகளை அகற்றுவது, பாலத்தை அண்மித்த பகுதிகளைச் சுத்தம் செய்யதல் உட்பட பல்வேறு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.





