பேராதனையில் உயிரிழ்ந்த கர்ப்பிணி தாய்
அறுவைசிகிச்சைக்குப் பிறகு 26 வயது கர்ப்பிணி தாய் உயிரை இழந்துள்ளார்.
இந்த சம்பவம் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (06) இடம்பெற்றது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பெண் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
கண்டி கன்னோருவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
பிரசவித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிரசவத்திற்காக சிசேரியன் செய்யும் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்துகளின் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாகவோ இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிட முடியும் என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் மருந்து தட்டுப்பாடு முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.