செய்தி தமிழ்நாடு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இந்த   மாதவிடாயினால் உலகளவில் 50சதவீத பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் தொடர் வயிற்று வலி, உடல் ரீதியான பிரச்சினைகள்,எண்டோமெட்ரியோசிஸ் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எண்டோ மார்ச் எனும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ராவ் மருத்துவமனை முன்பாக துவங்கி ஆர்.எஸ்புரம் வழியாக 5கிலோ மீட்டர் வரை என 500க்கும் மேற்பட்டவர்கள் பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி