புற்றுநோய் சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசிய மன்னர் – பலரும் பாராட்டு
தனது புற்றுநோய் சிகிச்சை குறித்து மன்னர் சார்லஸ் வெளிப்படையாக பேசியதை பலரும் பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக, ஆரம்பகால நோயறிதலும் பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
Stand Up To Cancer பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Channel 4 இல் ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி செய்தியில் தனது சிகிச்சை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக மன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக எளிதாக உயிர்களை காப்பாற்றும் என்றும், மக்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிசோதனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும் மன்னர் எந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது வெளியிடப்படவில்லை.
77 வயதான அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் புற்றுநோய் கூட்டணியின் இணை மருத்துவ பணிப்பாளர் கிளேர் கார்ன்சி, மன்னரின் இந்த செய்தி மிகவும் சக்தி வாய்ந்தது என கூறினார்.





