புது அவதாரம் எடுக்கும் குரங்கு அம்மை ( Mpox ): இங்கிலாந்தில் எச்சரிக்கை!
இங்கிலாந்தில் ஒரு நபருக்கு முன்னர் குரங்கு அம்மை ( Mpox ) என அழைக்கப்பட்ட வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் (UKHSA) தெரிவித்துள்ளனர்.
இந்த குரங்கு அம்மை ( Mpox ) வைரஸ் இரண்டு கூறுகளை கொண்டுள்ளன அவை (clade Ib) மற்றும் (clade IIb) என்று அழைக்கப்படுகின்றன
சமீபத்தில் ஆசியாவிற்கு பயணம் செய்து திரும்பிய ஒருவரிடம் இந்தத் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைவது சாதாரணமானது என்று பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் (UKHSA) தெரிவித்துள்ளனர். இந்த புதிய திரிபின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
குரங்கு அம்மை( Mpox ) இன் (Clade Ib ) திரிபானது சில ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த (Clade IIb )திரிப்பானது, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் பல நாடுகளைப் பாதித்த
பலருக்கு குரங்கு அம்மை ( Mpox ) தொற்று லேசானதாக இருந்தாலும், கடுமையான நோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழி என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தடுப்பூசி 75-80% வரை குரங்கு அம்மை( Mpox-)க்கு எதிராகப் பாதுகாப்பளிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி புதிய திரிபுக்கு எதிராக எவ்வளவு தூரம் பாதுகாக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் எதுவும் நடத்தத்தப்படவில்லை என்றாலும் அதிக அளவிலான பாதுகாப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
இங்கிலாந்தில், மிக அதிக ஆபத்தில் உள்ளவர்கள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை ( ‘mpox’) தடுப்பூசி கிடைக்கிறது. அவர்கள்:
பலருடன் உடலுறவு கொள்பவர்கள்
குழுவாக உடலுறவில் ஈடுபடுபவர்கள்
உடலுறவு நடைபெறும் இடங்களுக்குச் செல்பவர்கள்
வைரஸ் பரிணாமம் (Virus Evolution) மற்றும் தடுப்பூசி அவசியம் பற்றியும்
டாக்டர் கேட்டி சின்கா (Dr Katy Sinka) (UKHSA-இல் பாலியல்ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளின் தலைவர்) கூறுகையில், மரபணுப் பரிசோதனை (genomic testing) மூலம் இதைக் கண்டறிய முடிந்தது.
“வைரஸ்கள் பரிணாமம் அடைவது சாதாரணமானதுதான்,அனால் பகுப்பாய்வது குரங்கு அம்மை ( ‘mpox’) எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும்,” என்று அவர் கூறினார்.
“தடுப்பூசி போட்டுக்கொள்வது கடுமையான நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு நிரூபிக்கப்பட்ட, பயனுள்ள வழியாகும். எனவே, நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், தயவுசெய்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் (University of Oxford) உலகளாவிய சுகாதார வலைப்பின்னலின் இயக்குநர் பேராசிரியர் ட்ரூடி லாங் (Trudie Lang) கூறுகையில், இந்த புதிய குரங்கு அம்மை ( ‘mpox’) வைரஸ் தொற்று, உலகெங்கிலும் பரவி வருகிறது, மேலும் அது பரிணாமம் அடைந்து வருகிறது” என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இங்கிலாந்தில் நோயாளிகளைக் கண்டறிந்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த “சிறந்த அமைப்புகள்” உள்ளன, ஆனால் உலகின் மற்ற பகுதிகளில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, தடுப்பூசி கிடைப்பது நம்பகத்தன்மையுடன் இல்லாததால், “இதை அடைவது கடினம்” என்று அவர் கூறினார்.
இங்கிலாந்திலும் மற்ற இடங்களிலும் இந்த நோயானது தோன்றினால், இது முந்தைய திரிபுகளை விடக் குறைவானதா அல்லது அதிக ஆபத்தானதா என்பதை மதிப்பிடுவதற்கு, அது எவ்வாறு பரவுகிறது மற்றும் மக்களை எவ்வளவு நோய்வாய்ப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று பேராசிரியர் லாங் கூறினார்.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது வரை குரங்கு அம்மை ( ‘mpox’) யால் உலகளவில் கிட்டத்தட்ட 48,000 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,500 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பெரும்பாலானவை மத்திய ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளன.
பொதுவான அறிகுறிகள் தோல் புண்கள் அல்லது சொறி ஆகும், இது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.
கூடுதலாக காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவையும் இருக்கும்.
இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பின்வரும் வழிகளில் பரவுகிறது:
நெருங்கிய உடல் தொடர்பு மூலம்
இருமல் அல்லது தும்மல் மூலம்
பாதிக்கப்பட்ட உடைகள், படுக்கை விரிப்புகள் அல்லது துண்டுகளைத் தொடுவதன் மூலம்.
குரங்கு அம்மை ( ‘mpox’) இருக்கலாம் என்று சந்தேகிக்கும் எவரும் என்ன செய்வது என்று ஆலோசனை பெற NHS 111 ஐத் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.




