ஐரோப்பா செய்தி

புட்டின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் – அமெரிக்கா பரபரப்பு எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கவை விடுத்தள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டாகியும் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பிடமிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அச்சுறுத்தல் அறிக்கையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை உக்ரைன் போருக்கு ரஷ்யா இழுக்கக்கூடும் என்றும், இது உலக நாடுகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில வாரங்களாக உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பல்வேறு விதமான ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உக்ரைனை வலுவிழக்க செய்வதற்காக ஆற்றல் வளங்களை குறி வைத்து தாக்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி