பிரித்தானியாவில் முன்பு எப்போதுமில்லாத அளவு காச்சல் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் (flu) நோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கூடுதலாக உள்ளது.,
இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான காய்ச்சல் (flu) நோயாளர்களை பதிவு செய்துள்ளதாகவும் NHS தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் சராசரியாக 1,700 காய்ச்சல் (flu) நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
:
இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட 50% அதிகம். மேலும், காய்ச்சல் (flu) சீசன் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக தொடங்கியுள்ளது.
இந்த முறை மிகவும் கடுமையான வைரஸ் திரிபு பரவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி சர் கிறிஸ் விட்டி(Sir Chris Whitty) அவர்கள், உயிர்களைக் காப்பாற்ற, முதியவர்களுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் காய்ச்சல் (flu) போன்ற நோய்களை NHS மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தச் சூழலில், தடுப்பூசி போட்டுக்கொள்வது மற்றும் தகுதியுள்ளவர்கள் முன்கூட்டியே மருத்துவ
உதவியை நாடுவது மிகவும் அவசியம் என்று சுகாதாரத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




