பிரித்தானியாவின் புதிய சட்டம்: கவலைக்கிடமான நிலையில் புலம்பெயர்வாளர்கள்!
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் சட்டம் புலம்பெயரும் திட்டத்தில் இருப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை.
சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கட்டுப்படுத்துவதற்கான அதிரடி முயற்சிகளை பிரித்தானிய அரசு துவங்கியுள்ளது.அதன்படி, சட்ட விரோத புலம்பெயர்வோரை கைது செய்தல், நாடுகடத்துதல், மீண்டும் அவர்கள் பிரித்தானியாவுக்கு வர, புகலிடம் மற்றும் குடியுரிமை கோர தடை விதித்தல் ஆகியவற்றை சாத்தியமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர பிரித்தானியா தீவிரமாக முயன்றுவருகிறது.
பிரித்தானியா கொண்டுவர இருக்கும் சட்டம் பிரித்தானியாவுக்குள் நுழையும் திட்டத்தில் பெரும் செலவு செய்து பிரான்சில் காத்திருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கனிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக பிரெஞ்சுக் கடற்கரை ஒன்றின் அருகே காத்திருந்த Khiyal Gul (41) என்பவர், வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தான் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழையப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஆனால், பிரித்தானிய பிரதமரின் புதிய சட்டம் குறித்து அறிந்ததும், பிரித்தானியாவுக்குள் நுழையும் தன் திட்டத்தை கைவிட்டுவிட்டார் Khiyal.இப்போதைக்கு பாரீஸிலேயே தங்கியிருக்கப்போகிறேன், அடுத்து என்ன செய்வதென்று இனிதான் யோசிக்கவேண்டும் என்கிறார் அவர்.