பிரான்ஸில் மீண்டும் குப்பைகள் தேங்கும் அபாயம்! நெருக்கடியில் மக்கள்
பிரான்ஸில் மீண்டும் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துப்பரவு தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
நே காலை முதல் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில்., கழிவுகள் சேகரிப்பாளர்கள், தரம் பிரிப்பவர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொற்று நீக்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்றுள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை, கழிவு எரிக்கும் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். Romainville மற்ற்கும் Aubervilliers நகரில் உள்ள இரு நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக கடந்த மாதம் 25 நாட்கள் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் தூய்மை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.