ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

பிரான்ஸில் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326 பேர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.

நேற்று 27 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்த்து பிரான்சில் கொரோனாத் தொற்றினால் 165.267 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாத் தொற்றினால் 13.281 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 760 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின் கொரோனாத் தொற்று விகிதம் 54.34 ஆக உள்ளது. எச்சரிக்கை நிலையயை இது எட்டி உள்ளது.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!