ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர் – தேவாலயங்கள் சேதம்

பாரிசில் உள்ள மூன்று தேவாலயங்களை சேதமாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஏழாம் வட்டாரத்தில் உள்ள Saint-François Xavier தேவாலயத்தினை சேதமாக்கிய குற்றத்துக்கான பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் விசாரணைகளில் குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னதாக 3 ஆம் மற்றும் 10 ஆம் வட்டாரங்களில் உள்ள தேவாலயங்களை சேதமாக்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தேவலயங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பரிஸ் நகரசபை வழக்கு தொடுத்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் பரிசில் உள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக Notre-Dame-de-Lorette Church (9 ஆம். வட்டாரம்) தேவாலயத்தில் உள்ள ஓவியம் ஒன்று சேதமாக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் பரிசில் உள்ள இரண்டு தேவாயலங்களுக்கு தீவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!