பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போராட்டம்
பிரான்சில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேற்று வியாழன் அன்று நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஓய்வூதிய வயதை 62 இலிருந்து 64 ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை நிராகரித்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் வியாழன் மாலை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பிரான்சின் மிகப்பெரிய தொழிற்சங்கமான (CGT) நாடு முழுவதும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகக் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் போது வன்முறை நடவடிக்கைகளின் மக்கள் ஈடுபடலாம் என கருதி, வியாழன் அன்று உள்துறை அமைச்சகம், பாரிஸில் 5,000 பொலிஸார் உட்பட நாடு முழுவதும் 12,000 காவல்துறையை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தாலும், அகிம்சை போராட்டங்களுக்கான தொழிற்சங்கத் தலைவர்களின் அழைப்புகள், நாடு முழுவதும் உள்ள பல ஆர்ப்பாட்டக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டன தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க பிரெஞ்சு காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் காவல் நாய்களை அனுப்பியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதிய சீர்திருத்தப் போராட்டங்களோடு நடந்த ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை சமூக ஊடகங்களில் பிரதமர் கண்டித்துள்ளார்.
வேலைநிறுத்தங்கள் காரணமாக, வெர்சாய்ஸ் அரண்மனை மற்றும் ஈபிள் டவல் உட்பட பல வரலாற்று நினைவுச்சின்னங்களை வியாழக்கிழமை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் சார்லஸ் III ஆகியோரின் வரவிருக்கும் அரசு பயணத்தின் போது வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு விருந்தொன்று திட்டமிடப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.