இலங்கை செய்தி

பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடியது – அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்

பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிராஜா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள்.

தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப் படுத்துவதற்கான அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு.

இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும்.

கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கையாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.

இங்கு ஜனாதிபதி வருகின்றபோது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் NPP உடைய தலைமை கட்சியான JVP இடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிவது காணப்படுகிறது.

தமிழ் தேசிய சக்திகள் இதனுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை.

எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே இது ஒரு அபாயமான விடயம். ஏனெனில் அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகின்றது. உண்மையில் கிராமகளில் அடிமட்டமாக இருக்கின்ற அந்த அடிமட்ட மக்களை பலவீனப்படுத்துகின்ற ஒரு அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முனைக்கிறது. இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு நிலைமை.

இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தமால் தேச நிர்மான அரசியலிலும் கவனம் செலுத்துகின்றபோது இந்த விடயங்களை வெற்றிகொள்ள
கூடிய நிலமை உருவாகும்.

இது தொடர்பான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இருக்கின்றது என நினைக்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!